தமிழில் பகவத் கீதை தொடர் வகுப்புகள் (இணையதளம் வாயிலாக)
அன்றாட வாழ்வில் நம் பணிகளை செம்மையாகச் செய்வதற்கும், ஆன்மிக முன்னேற்றத்திற்கும் வழி காட்டும் உன்னத நூல் பகவத் கீதை. நம் புறச்சூழல்களில், கடமைகளில், உறவுகளில் எவ்வித மாற்றங்களையும் கோராது, நம்மை மனத்தளவில் உயர்த்தி, புதிய நம்பிக்கை ஊட்டும் நன்னூல் பகவத்கீதை. கீதை, அகமாற்றத்திற்கான அழிவற்ற விதை. உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த மனிதர்கள் இதனை நன்கு கற்றறிந்து உற்சாகத்தையும், ஊக்கத்தினையும் பெற்று பயனடைந்துள்ளனர். வாருங்கள் ! நாமும் பயனடைவோம் !
இந்நூல் முறைப்படி, அத்வைத வேதாந்த விளக்கங்களுடனும் மற்றும் பிற தமிழ் நூல்களின் மேற்கோள்களுடனும், எளிய தமிழில், விளக்கப்படும். வகுப்புகள் வாரம் ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு சுலோகமும் விரிவாக விளக்கப்பட்டு, வகுப்புகள் நூல் முடியும் வரை நடத்தப்படும்.
சின்மயா மிஷன் மதுரையின் சுவாமி சிவயோகாநந்தா அவர்களால் வகுப்புகள் நடத்தப்படும். சுவாமிஜி அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக உபனிஷத்துக்கள், பகவத்கீதை, மஹாபாரதம், திருமந்திரம், பட்டினத்தார், திருக்குறள் போன்ற நூல்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார்.
சுவாமிஜியின் தமிழ் சொற்பொழிவுகள் சிலவற்றிற்கான இணைப்பு:
The Bhagavad Gita is a priceless teaching of the Ultimate Truth – an essential knowledge for every human being to live well. Since the knowledge was given to a man of action, on the battlefield, it is not merely a passive philosophy but a practical guide for our day to day living. Without demanding any changes in our external circumstances, duties or relationships, it simply focuses on transforming our inner personality. This makes it possible for one to discharge one’s worldly responsibilities with ease and at the same time evolve spiritually.
Methodology
We will study this text systematically, following the Advaita Vedanta tradition of Sri Adi Shankaracharya, with a practical approach. The text will be studied verse by verse with detailed explanation in Tamil, along with references from other Tamil texts. Classes will be held on Sunday mornings from 7-8 AM IST.
Course Acharya/Facilitator
Classes will be conducted by Swami Sivayogananda. Swamiji has been giving teaching Upanishads, Bhagavad Gita, Mahabharata, Thirumandiram and various other texts of Advaita Vedanta in Tamil for more than two decades.
A FEW TALKS IN TAMIL BY SWAMI SIVAYOGANANDA:
Bhagavad Gita Chapter 13: https://youtu.be/PuvAKY1cwro
Mahabharata: https://youtu.be/w4r0xDQCDJY
Yaksha Prashna: https://youtu.be/gUsyV9biEhs
Thirumandiram: https://youtu.be/3Erza2XcoR8
Medium of Instruction: Tamil
Please fill out the form below to register.
Post A Comments