காற்றைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்


வாழ்வில் தேடுதல் தவிர்க்க முடியாதது. தெளிய விரும்பியே நாமனைவரும் தேடுகின்றோம். எதைத் தேடுகின்றோம், தேட வேண்டும் என்பதற்கே ஓர் தெளிவு அவசியம். அது பலதரப்பட்ட மக்களுக்குப் பல்வேறாய் அமைகின்றது. தேடுதல் என்பது அவரவர் தேவைகளையும், ஆசைகளையும் பொருத்தே இருக்கின்றது. பெயர், புகழ், செல்வம், கல்வி, கொடை, சமூகப்பணி, இறைவன் என தேடுதல்களின் பரிமாணங்கள் பல. ஆனால் தேடுதலின் நோக்கம் மகிழ்ச்சி, மன நிறைவு, அமைதி இவற்றை அடைவதுவே. துன்பத்தை அடைதற்காக யாரும் எதையும் தேட விரும்புவதில்லை. 

 

பக்குவமுடையோர் உயர் விஷயங்களை நாடுகின்றனர். தற்காலிகமாக இன்பங்களையும், மனமகிழ்வையும் தருவனவற்றைக் காட்டிலும், நிரந்தரமான ஆனந்தத்தை தரக் கூடிய விஷயங்களை அவர்கள் ஆராய்ந்தார்கள். அதன் இறுதியை ஆன்மீகத்தில் கண்டார்கள்.  எல்லா நதிகளும் கடலில் முடிவது போல் , மனிதனின் தேடுதல்கள் ஆன்மீகத்தில் நிறைவு பெறுகின்றது. ஆன்மாவை அறிய விளையும் அறிவே ஆன்மீகம். ஆன்மாவைத் தேடுவோர் அதிசயமானவர்கள்.

Read more...

ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத் திறன்

ஆளுமைத் திறன் என்பது எல்லாத் துறைகளிலும் அவசியம் மிக்க ஒர் திறனாகும். அத் திறனுடையோரே சமுதாயத்தில் நல்வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர். தலைமைப் பண்பிற்குத் தேவையான முக்கியத் திறனும் அதுவே. அத் திறனின்றி செய்யப்படும் எச் செயலும் நீடித்த பயன் தராது. நிலைத்தும் நிற்காது. அரசியல், ஆன்மிகம், கல்வி, பொருளாதாரம், ஊடகம் மற்றும் வணிகம் என எல்லாத் துறைகளிலும் நிர்வாகத் திறனுடையோரைக் கண்டு வியக்கின்றோம்.  

 

 

இது பிறப்போடு வருவதா? அல்லது பயிர்சியால் வளரும் திறனா? எனக் கேள்விகள் எழுவதுண்டு. இது குறித்து பல நூல்கள் வெளி வந்துள்ளன. பல நிறுவனங்கள் பணம் செலவிட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றன. இவை பெரும்பாலும் மேலாண்மை (Management) சார்ந்த ஆய்வுகளாகவும், தகவல்களாகவும் இருகின்றன. அதில் குறையேதுமில்லை. பயனடைந்தோர் பலருண்டு.

Read more...

வாழ்வெனும் வானில் பறப்போம்

மனிதனுக்கென்று ஓர் சிறப்புண்டு. எச்சிகரத்தையும் எட்டும் ஆற்றலே அச்சிறப்பு. அது மனிதனின் சிறப்புரிமை மட்டுமல்ல, பிறப்புரிமையும் கூட. மனதின் வசப்பட்டுவதால் மனிதன் என்று பொருளல்ல. மனதை தன்வயப்படுத்தி, தன் செயல்களை தானே தீர்மானிக்கும் மகத்தான ஆற்றலின் உறைவிடம் என்பதால் மனிதன். ஆன்மிகம் முதல் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவை வரை இது பொருந்தும். நம்முடைய ஆற்றல்களை அறிவதும், அதைத் திறமையாகக் கையாள்வதும் அதிநுட்பமான ஓர் கலை. மறைநூல் நெறிகளும், மாமனிதர்கள் வரலாறும் நல்ல புரிதலை நமக்குக் கொடுக்கும். இதை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது கடமை.

Read more...

அன்பெனும் பிடியில் அகப்படும் செல்வம்

பிறவிகளில் மானுடப் பிறவியை உன்னதமானது என்று கூறுகின்றோம். அப் பிறப்பின் நோக்கமும், பயனும் என்ன? பிறவி பெற்ற அனைவரும் அதன் பயனை முழுமையாக அடைந்துவிட்டார்களா? உண்மையில் கொடுத்துவைத்தவர் யார்? என சிந்தனைத் திரையில் பல கேள்விகள்.

தன்யன் என்று ஒரு சொல்லுண்டு. வடமொழிச் சொல்லாக இருந்தாலும் அன்றாட வழக்கில் இதன் பயன்பாட்டினை பலமுறை நாம் கேட்டதுண்டு. நான் மிகவும் தன்யனானேன் என்று கூறுவார்கள். என்ன பொருள்? கொடுத்து வைத்தவன், ஆசீர்வதிக்கப்பட்டவன், அதிஷ்டமுடையவன் என்றெல்லாம் பல பொருள் கூறலாம். ஆனால் தனம் உடையவனைத் தன்யன் என்கின்றோம். தனம் என்றால் செல்வம். செல்வமுடையவனை தன்யன் என்பர். எனவே எது செல்வம்? யார் உண்மையில் செல்வந்தர் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் அதை நம் அறிவில் உரமாக ஏற்றி வாழ்தல் சிறந்தது. அது பிறவிப் பயனை நமக்குணர்த்தும்.

 

Read more...

குருதேவர் சுவாமி சின்மயானந்தர்

 

ஒவ்வொரு தனிமனிதருக்கும், எவ்வித பாகுபாடுமின்றி ஆன்மீகத்தின் உட்பொருளையும், அதனை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்து அனைவரும் ஆன்ம மலர்ச்சியும், ஆனந்தமும் பெற துறவுடன் , தளராத தொண்டும் ஆற்றிய, இறையனுபூதி பெற்ற மாமனிதர் சுவாமி சின்மயானந்தர். தனது எழுச்சி மிக்க சொற்பொழிவுகளால் பகவத்கீதையை உலகெங்கிலும் உள்ள அனைவரும் அறியச் செய்த பெருமையும் இவரைச் சாரும்.

Read more...

திட்டமிடுங்கள்... செயல்படுத்துங்கள்....

“செயலைத் திட்டமிடு , திட்டமிட்டபடி செயல்படு” என்பது சுவாமி சின்மயானந்தரின் பொன்மொழி. செயல் இல்லாத  திட்டங்கள் வெறும் கனவுக் கோட்டைகள், காற்றில் கலையும் மேகங்கள். திட்டமில்லாத செயல்களோ  சேமிப்பற்று வீணாகும் மழைநீர் போலாகும். திட்டமிடுதல் அறிவின் கூர்மை.  செயல்படுதல் மனதின் வலிமை இவ்விரண்டும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.  வெற்றியை எல்லோரும் விரும்பினாலும், வெகு சிலரே அதனை அடைகின்றனர். என்ன காரணம்? அது திட்டமிடுதலுக்கும், செயல்படுதலுக்கும் இடையில் உள்ள தொலைவைப் பொறுத்தே அமைகின்றது. அகமாகிய அறிவும், புறமாகிய செயலும் இணைந்தாலன்றி இது எட்டாத கனியே. இவ்விரண்டும் கிருஷ்ணனையும். அர்ஜுனனையும் போன்று பொருந்தியிருத்தல் அவசியம்.

Read more...